Categories
உலக செய்திகள்

யாருக்கும் உரிமை இல்லை…. குடிமக்களுக்கு மட்டுமே உரிமை – குவைத் அரசு அதிரடி…!!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக கொரோனாவின் போக்கு திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக கொரோனா பரவல் இருக்கிறது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த போதிலும் அதன் வீரியம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக தங்கள் நாட்டு மக்களை தவிர வேறு நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குள் வர கூடாது என்று குவைத் அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் இந்த தடை மறு உத்தரவு வரும் வரை திரும்பவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களுடைய நாட்டு குடிமக்களுக்கு மட்டும் எந்த தடையும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் ஒரு வாரம் மட்டும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து மற்றொரு வாரம் அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |