Categories
தேசிய செய்திகள்

யாருக்கும் கொரோனா இழப்பீடு கிடையாது…. அரசு அதிரடி…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பைசர் மட்டும் மாடர்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத சட்டரீதியான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனமும் சட்டரீதியான பாதுகாப்பை கோரியதாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய தடுப்பூசிக்கு அரசு சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |