தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில், NOTA பட்டன் EVM இல் வைக்காமல் ரகசியமாக வாக்கு செலுத்தும் உரிமையையும், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையும் மறுத்த மாநில தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் வகையில் தேர்தல் விதி பிரிவு 71 படி நான் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்..