Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கு ஆதரவு கொடுக்க போறாங்க..? இவங்க தான் எங்க டார்கெட்… வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள், 1 1/2 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேச்சைகள், இதர கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவில் வாக்குகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கிறது. அவை அடிப்படை பலத்தை அந்தக் கட்சிகளுக்கு கொடுக்கிறது. கூடுதல் வாக்குகளை பெற்றால்தான் ஏதேனும் ஒரு கட்சி வெற்றியை உறுதி செய்ய முடியும். இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டிகள் பலமாக இருப்பதால் வாக்குகள் சிதறுவதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது. மேலும் புதிய வாக்காளர்களை பங்களிப்பு அதிகமாக இருப்பதால் அனைத்து கட்சிகளும் புதிய வாக்காளர்கள் ஆதரவு பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது 17 லட்சத்து 19 ஆயிரத்து 609 வாக்காளர்கள் 7 தொகுதிகளிலும் இருந்தனர்.

ஆனால் தற்போது 18 லட்சத்து 77 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிய வாக்காளர்கள் 1 லட்சத்து 57 ஆயிரத்து 468 பேர் உள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் 18 ஆயிரத்து 202 பேரும், நிலக்கோட்டையில் 25 ஆயிரத்து 969 பேரும், பழனியில் 20 ஆயிரத்து 115 பேரும், நத்தத்தில் 24 ஆயிரத்து 762 பேரும், ஆத்தூரில் 23 ஆயிரத்து 40 பேரும், வேடசந்தூரில் 17 ஆயிரத்து 133 பேரும், திண்டுக்கல்லில் 28 ஆயிரத்து 247 பேரும் உள்ளனர். எனவே வேட்பாளர்கள் புதிய வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவருக்கும் புதிய வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |