உலக சுகாதார அமைப்பு இந்தியாவினுடைய தற்போதைய நிலை எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் தோன்றிய கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் பிரேசிலும் உள்ளது. மேலும் பலவிதமான நாடுகளில் கொரோனாவினுடைய பரவல் 2 ஆம் மற்றும் 3 ஆம் அலையையும் எட்டியுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலையினால் தினமும் 3 ,00,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 3,000 அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வருகின்றனர் என்று ஐரோப்பிய நாடுகளினுடைய உலக சுகாதாரத்தின் அமைப்பினுடைய தலைவரான ஹன்ஸ் கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவினுடைய புதிய அலை உருவாகின்ற இந்த சூழலில் நாடுகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்த கூடாது என்றும், கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு குறைவாக செலுத்துகின்ற சமயம் கூட்டங்களை சேரவும் அனுமதிக்கக் கூடாது என்றுள்ளார். மேலும் அவ்வாறு கூட்டத்தை அனுமதித்தால் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார்.