Categories
உலக செய்திகள்

யாருக்கோ பரிசு விழுந்துவிட்டதே… பொறாமையில் பொங்கியவருக்கு… என்ன கிடைத்தது தெரியுமா…?

கனடாவில் மாகாண வரலாற்றிலேயே முதன் முறையாக லாட்டரியில் மிக பெரிய பரிசுத்தொகையை ஒருவர் பெற்றிருக்கிறார். 

கனடாவிலுள்ள மணிடோபா என்ற மாகாணத்தில் இருக்கும் வின்னிபெக் என்ற நகரில் வசிப்பவர்  John Chua. இவருக்கு இந்த மாகாண வரலாற்றிலேயே முதல் முறையாக லாட்டரியில் மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது. அதாவது $60 மில்லியன் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து John Chua  கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 23ம் தேதியன்று நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மனைவி என்னை அவசரமாக எழுப்பி, வின்னிபெக்கில் லாட்டரியில் $60 மில்லியன் பரிசு தொகையை யாரோ பெறபோகின்றனர் என்று கூறினார்.

இதனால் இந்த மிகப்பெரிய பரிசுத்தொகையை  யாரோ பெறப்போகிறார்கள் என்று நினைத்து பொறாமைப்பட்டேன். அதன்பின்பு நினைத்து பார்க்கமுடியாத அளவில் இந்த மிகப்பெரிய தொகை எனக்கு விழுந்திருப்பதாக இமெயில் வந்தது. இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் இந்த தொகையை எனது மனைவி Joana, என் தாய் Angie Chue மற்றும் எனது மாமா Ben Lagman ஆகியோருடன் நான் பகிர்ந்து கொள்ள போகிறேன். இனிமேல் நாங்கள் யாரும் கனவு காண வேண்டியதில்லை. இந்த தொகையை என்ன செய்யலாம்? என்று தான் சிந்திக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |