Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியல… அரசு மருத்துவமனை அருகே கிடந்த ஆண் சடலம்… போலீஸ் விசாரணை..!!

பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் அங்கு கிடந்த உடலை பார்வையிட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் இறந்து கிடந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ? யார் ? எப்படி இறந்தார் ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |