காபூலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பகுதியில் IED மூலம் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதாவது வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து Jalalabad பகுதியில் இரண்டாவதாக குண்டுவெடிப்பு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
#BREAKING
The second explosion today in Kabul: A Taliban vehicle was targeted and detonated in the Jalalabad area. Not yet any report of casualties and claims of responsibility . https://t.co/YL9Bfmfm4H— Tehran Times (@TehranTimes79) September 18, 2021
மேலும் தலிபான் பயங்கரவாதிகளின் வாகனங்களை குறிவைத்து Jalalabad-ல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதோடு மட்டுமில்லாமல் இந்த தாக்குதல் தொடர்பில் யாரும் இதுவரை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் இந்த தாக்குதல்களை ஐ.எஸ்(கே) பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.