அடையலாம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக மரத்தில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வனக்காப்பாளர் சரவணபெருமாள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் வாழவந்திநாடு காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மரத்தில் தொங்கிய உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என்றும், கொலையா தற்கொலையா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.