படுகாயமடைந்து சாலையில் கிடந்த அடையாளம் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி ஏரிக்கரை பகுதியில் உள்ள சாலையில் மூதாட்டி ஒருவர் வாகனத்தில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து கிடந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற நாமக்கல் காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த மூதாட்டியின் யார் என்பது எப்படி உயிரிழந்தார் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.