விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண அழைப்பிதழை ஆதார் அட்டை வடிவில் வடிவமைத்துள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருவோர் எளிதாக திருமண மண்டபத்தை அடைய qr கோடு மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சுத்துள்ளனர்.
மணமக்கள் விஜயன் மற்றும் ஜெயராணி திருமண அழைப்பிதழில் திருமண தேதி ஆதார் எண்ணை போலவும் திருமணம் நடக்கும் இடம் மற்றும் நாள் ஆகியவை ஆதார் அட்டையில் இடம் பெற்று இருக்கும் விவரம் போலவும் அச்சிடப்பட்டுள்ளது. முடிவில் “இவண்: சாதாரண மனிதனின் அழைப்பு” என ஆதாரின் ‘சாதாரண மனிதனின் அடையாளம்’ என்ற வாசகத்தைப் போலவே ஒன்றை வைத்து முடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.