Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யாருப்பா நீங்களாம்….! 5 வயசுல நிறைவேறாத தந்தையின் ஆசையை…. 50 இல் நிறைவேற்றிய தங்க மகன்கள்…..!!!!

கள்ளக்குறிச்சி செம்படை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (50). இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக இவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. காது குத்திக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஏழுமலை ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை.

இந்நிலையில் அவர், தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் அவருக்கு மொட்டை அடித்து தாய்மாமன் மடியில் அமர வைத்து காது குத்தினர். அவர்களது குலதெய்வ கோயிலில் நேற்று நடந்த இந்நிகழ்வில் அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு அசைவ விருந்து வைக்கப்பட்டது.

Categories

Tech |