Categories
மாநில செய்திகள்

யாருமே இப்படி இல்லை…. முதல்வர் சாதனை பண்ணிட்டாரு…. விவசாய சங்கத்தினர் பாராட்டு…!!!

மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவேல் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று நன்றி கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது”தமிழகத்தில் எந்த முதலமைச்சரும் கொண்டுவராத வேளாண்மைக்கு என தனி நிலை அறிக்கையை நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ளார்.

இந்திய உழவர்களுக்காக அர்ப்பணிப்பு செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்ததோடு நில்லாமல் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் சிறப்பு மையத்தை அமைக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக் குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்களது நன்றியை தெரிவித்தோம்.

மேலும் உழவர்கள் பயன் பெற்றிடும் வகையில் நடப்பாண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கிய முதலமைச்சருக்கு பாரம்பரிய நெல் வகைகளான கருப்பு கவுனி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றால் செய்யப்பட்ட பாரம்பரிய நெல் கதிர் கொத்தை தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த உழவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் இயற்கை வேளாண் துறை சார்பில் அவரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |