மதுரையில் மர்ம நபர் பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவையில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி. இந்நிலையில் கற்பகவல்லி சிறிது வேலையாக வெளியே சென்று விளாங்குடி பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் பொதுமக்கள் யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி கற்பகவல்லி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தார்.
அப்போது கற்பகவல்லி கத்திக் கூச்சலிட்டும் விடாமல் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதனால் பதற்றமடைந்த கற்பகவல்லி இது குறித்து கூடலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.