நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை அந்நியர்களால் ஆக்கிரமிக்கபடாத இடம், காபூலில் இருந்து வடக்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணம் தான். பஞ்ச்ஷீர் என்றால் ஐந்து சிங்கங்கள் என்று பொருள். சோவியத் யூனியன், அமெரிக்கா, தலிபான் என எந்த படைகளும் இந்த இடத்தை கைப்பற்ற முடிந்ததில்லை. அகமது ஷா மசூத் தலைமையில் 90களில் வடக்கு கூட்டணி அமைந்த போது இதுவே தலைமையிடமாக இருந்தது. தற்போது தலிபான எதிர்க்க தயாராக உள்ளது.