Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாருமே என்னை மதிக்க மாட்டாங்க’… நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசிய புகழ்… வைரலாகும் வீடியோ…!!!

முரட்டு சிங்கிள்ஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் புகழ் எமோஷனலாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் புகழ் . இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது குக் கோமாளி நிகழ்ச்சியை போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது ‌ . இந்த பைனல் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பாலா, புகழ், பவித்ரா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய புகழ் ‘என்னை பலரும் பலவிதமாக அவமானப்படுத்தினார்கள். யாருமே என்னை மதிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது எனக்கு கால் செய்து பேசுகிறார்கள்’ என எமோஷனலாக கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |