Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருமே கல்யாணத்துக்கு ஒத்துக்கல…. அதான் இப்படி பண்ணிட்டோம்…. காதல் ஜோடி போலீசில் தஞ்சம்….!!

பெற்றோர்கள் எதிர்ப்புடன் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள ஜம்புமடை பகுதியில் விக்னேஸ்வரன் (வயது 24) என்பவர் வசித்து வருகின்றார். கோவை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் திருச்சி மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சுபதாரணி (22) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரிடம் சம்மதம் கேட்டபோது இரு தரப்பினரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விக்னேஸ்வரன் மற்றும் சுபதாரணி எருமப்பட்டி அடுத்துள்ள தலமலை பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டு எருமப்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமரசம் பேசியதில் பெற்றோர்கள் அதற்கு உடன்படவில்லை. இதனால் காவல்துறையினர் காதல் ஜோடிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என இரு தரப்பு பெற்றோர்களிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |