தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பரபரப்பு இருக்கின்றதோ இல்லையோ ஆனால் உள்ளூர் சுவாரசியங்கள் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சில காட்சிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஒரு வாக்கு சீட்டு சிக்கியுள்ளது.
அதை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கிவாரிப்போட்டுள்ளது. ஏனெனில் அந்த வாக்குச்சீட்டில் ஓட்டு போட்ட வாக்காளர் எந்த வேட்பாளரும் எனக்கு ரூபாய் 500 பணம் தராததால் வாக்களிக்க விருப்பமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வாக்குசீட்டில் வாக்காளர் எழுதியதால் அந்த வாக்கு செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது.