உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயிலில் பாடல் ஒன்றை பாடும் பெண் ஒருவரின் வீடியோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நன்றாகவே பாடக்கூடியவராக இருந்தாலும் முறையாக சங்கீதம் கற்காமல் இருப்பார்கள்.
இருப்பினும் அவர்கள் குரல் வளமும், பாடும் பொழுது கொடுக்கும் அழகு நம்மை வியக்க வைக்கும். அப்படி யார் என்று தெரியாத இந்த பெண் சுதி சுத்தமாக “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற பாட்டை பாடுவதாகவும் பாடலுக்கு ஏற்றார் போல இவர் தாளம் வியக்க வைப்பதாகவும் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் இவர் போன்ற திறமை மிக்கவர்களுக்கு வாய்ப்பு வழங்க கூடியவர்கள் உதவினால் இவர்களுடைய வாழ்க்கை மாறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.