ரேஷன் அரிசியை விற்பவர்களின் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருள் தருவது நிறுத்தப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி பறிமுதல் தொடர்பாக குமார் என்பவர் முன்ஜாமீன் கோரி வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுவதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரிசியை விற்பவரின் குடும்ப அட்டைகளுக்கு உணவுப்பொருள் தடுத்து நிறுத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். விரைவாக தகவலை தந்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.