Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரும் அப்படி மட்டும் செய்யாதீங்க….. நாட்டு மக்களுக்கு மோடி முக்கிய உத்தரவு ….!!

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாராந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று நடைபெற்ற 67வது மங்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். ஒன்று இன்று கார்கில் நினைவு தினம்  கொண்டாடப்படுவது. இதையடுத்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு நமது இந்திய மண்ணில் மக்களுக்கான உத்வேகத்தை எடுத்துக் கொண்டிருப்பார்கள.  இந்த நேரத்தில் அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த ஒரு கார்கில் நினைவு தினத்தை அடுத்து நாட்டின் பல முக்கியமான நலன் சார்ந்த விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, பொய்யான தகவல்களை பரப்புவது என்பது நாட்டிற்கு மிகப்பெரிய கேடான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் அதனை செய்ய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக போகவில்லை. அதற்கு எதிரான போர் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |