கனடாவில் போராட்டம் நடப்பதால் இந்தியாவில் இருந்து யாரும் அந்நாட்டிற்கு வரவேண்டாம் என அங்குள்ள இந்திய சுகாதாரதுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையும், கட்டுப்பாடுகளையும் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து லாரி டிரைவர்கள் தலைநகர் ஒட்டாவா, டொரன்டோ போன்ற பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் கனடாவில் உள்ள இந்திய சுகாதாரதுறை அமைப்பு போராட்டம் நடக்கும் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து யாரும் வரவேண்டாம் என்று கூறியுள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும் படி கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.