தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்ற ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கைவிட இந்த ஆண்டு வித்தியாசமான ஒன்று. காவல் துறை சார்பாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழைய வீடியோக்களை பகிர வேண்டாம் என்று தமிழக காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.