விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது விஜய்யும் ஓய்விற்கு கிளம்பி துபாய் சென்றிருக்கின்றார். இந்த சூழலில் வாரிசு படப்பிடிப்பில் எப்போதும் ஏதாவது ஒரு வீடியோ போட்டோ வெளியாகிக்கொண்டே இருந்தது. இதனால் விஜய் கோபமாகி எல்லாரையும் திட்டியதாக கூறப்படுகிறது.
தற்போது அதை தொடர்ந்து விஜய் வாரிசு திரைப்படத்தில் படப்பிடிப்பில் இருந்த பவுன்சர் டீமையும் மாற்ற சொல்லிவிட்டாராம். ஆமாம் அவர்கள் சரியாக பார்த்திருக்க வேண்டும் யார் கையில் போன் இருக்கிறது என்று அதை தவற விட்டு இருக்கின்றார்கள். அதனால் அந்த டீம் வேண்டாம் அதற்கு பதிலாக புது டீமை போடுங்கள் என விஜய் சில நாட்களுக்கு முன்பு கூறியுள்ளாராம்.