Categories
மாநில செய்திகள்

யாரும் உயிரை விடாதீங்க…! வாழ்ந்துதான் போராடவேண்டும்…. பெண் குழந்தைகளுக்கு முதல்வர் அட்வைஸ் …!!

பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்ய வேண்டாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்  வாழ்ந்து காட்டுவதன் மூலமாக தான் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் என கூறியுள்ளார்.

அவர் பேசிய வீடியோவில், தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்வது என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறது என்று பொருள். வாழ்ந்துதான் போராடவேண்டும்.

வாழ்ந்து காட்டுவது மூலமாகத்தான் உங்கள்கிட்ட அத்துமீறலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும். அதனால யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என ஒரு தந்தையாக, சகோதரனாக குடும்பத்தில் ஒருத்தனா கேட்டுக்கொள்கின்றேன். உங்கள பாத்துக்க நாங்க  இருக்கோம்,  நான் இருக்கேன், அரசாங்கம் இருக்கு என தெரிவித்தார்.

Categories

Tech |