இதில் இரண்டு BS 6 மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் புதிய பிரத்யேக ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் பயன்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது . இவை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது .
இதில் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை பராமரிப்பது எளிமையாக இருக்கும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய பஜாஜ் CD 100 BS 6 மாடலில் 100 CC மற்றும் 110CC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
புதியCD 110 மாடலில் L.E.D. D.R.L ,புதிய கடாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது இதனை பஜாஜ் பேஷ் பிளேட் என அழைக்கிறது.பஜாஜ் CD BS6 மோட்டார்சைக்கிளின் மாடல்கள் ஷோரூம் விலை ரூ. 40,794 இருப்பதால் நாட்டில் தற்சமயம் கிடைக்கும் குறைந்த விலையில் BS மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன.
பஜாஜ் பிளாட்டினா BS 6 ,பிளாட்டினா 100 மற்றும் பிளாட்டினா 110 ஆகிய மாடல்களில் ஹெச் கியர் என இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் இருக்கிறது . இவற்றின் விலை முறை ரூ. 54,797மற்றும் ரூ. 47,264 என நிர்ணயம் பட்டுள்ளது.