Categories
மாநில செய்திகள்

யாரும் என்னை காண நேரில் வர வேண்டாம்…. விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தேமுதிகவினர் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2005ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றோம். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கு, என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போதுதான் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் பெரும் கூட்டம் கூடினால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அதனால் அனைவரின் நலன் கருதி எனது பிறந்த நாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை காண நேரில் வர வேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் அவரவர் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். என் உடல் நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |