Categories
மாநில செய்திகள்

“யாரும் ஓட்டு போடாம வீட்டுல இருக்காதீங்க!”…. குஷ்பு வலியுறுத்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாக்களித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, “யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருக்காதீர்கள். அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் தைரியம் இருப்பதால் தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |