கர்நாடக மாநிலத்தில் பிள்ளைகளின் படிப்பிற்காக தனது தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கிய தாயின் செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக சென்ற மார்ச் 29ஆம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கதவின் எப்போது திறக்கப்படும் என அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். மூன்றாம் கட்ட தளர்வு கடை அறிவித்த மத்திய அரசு பள்ளி, கல்லூரிகள் தடை தொடரும் என கூறியிருக்கின்றது. இந்த நிலையில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர். அதனால் சில குடும்பத்தினர் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வாங்குவதற்கு வசதியில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்களின் ஒருவர்தான் கர்நாடக மாநிலத்தில் கடாக் மாவட்டத்தில் வசித்து வரும் சாவித்ரி என்பவர். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கின்ற சுரேகா என்ற மகளும் எட்டாம் வகுப்பு படிக்கின்ற அபிஷேக் என்ற மகனும் இருக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ள காரணத்தால் பிள்ளைகள் இருவரும் கல்வி கற்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.
இத்தகைய சூழலில் கர்நாடக அரசு தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சாவித்ரிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்து இருந்தாலும், மறுபக்கம் வீட்டில் தொலைக்காட்சி இல்லாமல் எப்படி படிப்பார்கள் என்ற வருத்தத்தையும் அளித்துள்ளது. இதனால் தொலைக்காட்சி வாங்குவதற்கு பலரிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அவருக்கு எவரும் கடன் அளிக்க முன்வரவில்லை. இதனால் அவர் தனது தாலிச் சங்கிலியை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அதன் மூலமாக தொலைக்காட்சி வாங்கியுள்ளார். அந்த தொலைக்காட்சி மூலமாக அவரின் இரு பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளின் படிப்பை கண்டு பூரிப்படையும் சாவித்ரிக்கு தாலியை விற்றது ஒரு பொருட்டல்ல!