தமிழக அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் நாம் அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பினை நிறைவேற்றுவதற்கும் பல கட்டங்கள் இருக்கின்றது. எடுத்துக்காட்டிற்கு ஒரு அறிவிப்புக்கு பல துறைகளில் ஒத்துழைப்பு, அனுமதி தேவை.
அது குறித்து அந்தந்த துறையின் செயலாளர்கள் எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து, துறைரீதியான கூட்டத்தை கூட்டி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும், தேவைப்பட்டால் தொடர்புடையத் துறைகளோடு ஒரு துணை கமிட்டி நியமித்துக் கொள்ளலாம், துறை செயலாளர்கள் கூடி முடிவெடுப்பதாக இருக்கட்டும், துணை கமிட்டிகள் முடிவெடுப்பதாக இருக்கட்டும், ஒரு கால வரம்புக்குள் அதை நிறைவேற்ற வேண்டும். எல்லாமே செயல்பாடுகளாக அமைந்திட வேண்டும்.
ஏனென்றால் நாம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்கு நிதித் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு துறையிலும் மீட்டிங் வைத்து, அதில் விவாதம் செய்து எதை செய்யலாம் ? எதை செய்யவேண்டாம் ? அதற்க்கு என்ன நிதி ஆதாரம் என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்து தான் அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளோம்.
அதே போல் எந்த ஒரு அறிவிப்பினையும் செயல்படுத்தும் போது வழக்குகள் வராமல்…. கோர்ட்டுக்கு போய் ஸ்டே ஆர்டர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும், உங்கள் இடத்தில் இருக்கின்றது. ஆகவே இந்த கூட்டத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டு விடாமல் நிறைவேற்றிவிட வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.