மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில மாநிலங்களில் சதம் அடித்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் கூறுகையில், உலக கிரிக்கெட் இறுதிப்போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கி விட்டது என்றும், இந்த நிலைக்கு நம் நாடு வருவதற்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரி கொள்கை அல்ல வரி கொள்ளை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.