சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நான்கு நாடுகள் தவிர மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு ரேண்டமாக சோதனை செய்யப்படும் என்றார்.