Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் நம்பாதீங்க… ‘தலைவி’ ரிலீஸ் குறித்து பரவிய வதந்தி… நடிகை கங்கனா விளக்கம்…!!!

தலைவி படத்தின் ரிலீஸ் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை கங்கனா விளக்கமளித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பூர்ணா, சமுத்திரகனி, நாசர், மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தலைவி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

Thalaivi Movie - Trailer, Star Cast, Release Date | Paytm.com

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. தற்போது இதுகுறித்து நடிகை கங்கனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் . அதில் ‘தலைவி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார் .

Categories

Tech |