Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாரும் நம்பாதீங்க’… 4-வது திருமணம் குறித்து பரவிய வதந்தி… நடிகை வனிதா விளக்கம்…!!!

நடிகை வனிதா கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா ‌. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதன் பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது நடிகை வனிதா திரைப்படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை நடிகை வனிதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘நான் உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். இப்போது நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன். யாரும் எந்த ஒரு வதந்தியையும் பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |