கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் யாரையும் பட்டினியாக இருக்க விட மாட்டோம் என்று பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் நான் நாளை முதல் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதையடுத்து முழு ஊரடங்கு சாமானியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை பலரும் எழுப்பியுள்ள நிலையில், முதல்வர் பினராய் விஜயன் அதற்கு பதில் அளித்துள்ளார். உணவு தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கம் உணவளிக்கும் என்றும், யாரும் பட்டினியாக இருக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது செய்தியில் உறுதியளித்துள்ளார்.