Categories
உலக செய்திகள்

யாரும் பயப்படாதீங்க….!! “24×7 கட்டுப்பாட்டு மையங்கள்”…. இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சகதின் அறிவிப்பு….!!

உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு மக்களை மீட்பது தான் இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பெரிய சவாலாக மாறி இருக்கிறது. உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனின் வான் பகுதி மூடப்பட்டதால் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தலை நகரங்களான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்கு பின்னர் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ஹங்கேரி, ருமேனியா, போலந்து, ஸ்லோவாக் குடியரசு ஆகிய அண்டை நாடுகளுடனான எல்லை வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் மூலம் கட்டுப்பாட்டு மையங்களை  தொடர்பு கொள்ளும் வசதி அமைக்கப்பட்டுள்ளது . இதனை தொடர்ந்து 1800118797 என்ற எண்ணை பயன் படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்ளலாம்   என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்  ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’ என்கிற டுவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய மற்றும் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது.

Categories

Tech |