அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் நிறுத்தப்பட்ட 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
எலான் மஸ்க் என்பவர் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவர் அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் 40 செயற்கைக்கோளை நிலைநிறுத்தி உள்ளார். தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜக்சன் என்ற ஒரு மாபெரும் நிகழ்வு வெளியேறியுள்ளது. இதனால் பூமியின் வளி மண்டலத்திற்கு மிக அருகில் புவி காந்த புயல் உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் உள்ள புவி வட்டப்பாதையில் அதிவேகமாக செயல்படும் இணைய சேவைக்காக நிலைநிறுத்தப்பட்ட 49 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளன.
இந்த செயற்கைகோள் புவி காந்த புயலால் ஏற்பட்ட மிகையான நிலுவையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும். மேலும் மற்ற செயற்கைகோளுடன் இவை மோத வாய்ப்பில்லை என்றும் பூமியில் விழுந்து சேதமடைந்த செயற்கைக்கோள்களின் பாகங்கள் மக்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஸ்டார் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.