உக்ரைனில் சிக்கி தவிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்று வதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடும் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனில் உள்ள மக்களை வெளிநடப்பு செய்வதற்கு சுமி, கீவ் மற்றும் எனர்க்கோடர் நகரங்களில் இருந்து மூன்று பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு வழிதடங்கள் வழியாக 35 ஆயிரம் பேர் வெளியேற்ற பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மரியுபோல், இஸியம், வோல்னோவாக ஆகிய நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு மேலும் ஆறு பாதுகாப்பு வழித்தடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என்று கூறியுள்ளார்.