கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கும் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று முதல் உதகை அருகே உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் கால வரையின்றி மூடப் படுவதாகவும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் இடமும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இது தவிர மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் இன்று முதல் மூடப் படுவதாகவும், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளும் பூங்காவை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.