Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே வராதீங்க…. வான்பகுதியை மூடிய உக்ரைன்…. தவித்து வரும் இந்தியர்கள்….!!

உக்ரைன் தனது வனப்பகுதியை மூடி விட்டதால் மீட்பு விமானங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா  நேற்று முன்தினம் உக்ரைன் மீது  போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது .மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போரினால் உக்ரைனில் உள்ள இந்திய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். இதனை தொடர்ந்து உக்ரைன் தனது வான்பகுதியை மூடி விட்டதால் மீட்பு விமானங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் உள்ள எல்லைப் பகுதிகளில் சோதனை முகாம்களை அமைத்து உள்ளது. மேலும் உக்ரைனின் எல்லைப் பகுதிக்குள் முன் அறிவிப்பின்றி செல்ல வேண்டாம் என்றும் தூதரக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரேனின் எல்லை நோக்கி செல்வதை விட மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பதே பாதுகாப்பானது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என உக்ரைனில் உள்ள கிழக்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்த்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |