Categories
தேசிய செய்திகள்

யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது – மோதிக் கொண்ட காவலர்கள் ….!!

ராணுவ முகாமை அமைக்கச் சென்ற இடத்தில் அசாம் காவல் துறை , மேகாலயா காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசாம் மாநிலத்தின் லம்பி என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைப்பதற்கு அந்த மாநிலத்தின் காவல் துறை ஆய்வு  நடத்தியது.  அப்போது அந்த இடத்திற்கு வந்த மேகாலயா மாநிலகாவல் துறையினர் , இந்த பகுதி எங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருதரப்பும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற வாக்குவாதம் உயரதிகாரிகளின் சமரசத்தால் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து அங்கு  வந்த அசாம் மாநில கம்ரூப் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்சிப் சைகியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டார்.

சமீப காலமாகவே அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு இடையேயான எல்லை தொடர்பான பிரச்னை நடந்து வரும் நிலையில் தற்போது இந்த விவகாரம்  பூதரகமாக மாறியுள்ளது. காவலர்கள் சண்டையிட்டுக் கொண்ட இடம் அசாம் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |