அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஜப்பான் அரசாங்கம் 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பான் அரசாங்கம் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஜப்பானிலுள்ள தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடைய 80 லட்சம் சிறுவர்களுக்கு அதனை செலுத்தும் பணி தீவிரமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.