சசிகலாவின் ஆட்சேபனையை மீறி அவரை சந்திப்பதற்கு யாரெல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை கர்நாடகா பொது தகவல் துறை வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா, ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தன்னைப் பற்றி எந்த ஒரு தகவலையும் மூன்றாவது நபருக்கு வழங்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய குடிமகனாக தனக்கு ஒரு சிறைக் கைதியின் விடுதலை, அவரை சந்திக்க யாரெல்லாம் வருகிறார்கள் என்ற விபரங்களை தெரிந்து கொள்வதற்கு உரிமை உள்ளது என்றும் தான் கேட்ட விவரங்களை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் பொது தகவல் துறைக்கு சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தியின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தை பொது தகவல் துறை, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையில் சசிகலாவை யாரெல்லாம் சிறைக்குச் சென்று சந்தித்தார் என்பது குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.