காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தத்துமுத்துபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசித்ரா(19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த விசித்திரா திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விசித்ராவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் மாரிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசித்ராவை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.