தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, சாம், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருட பொங்களுக்கு வாரிசு படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காபி வித் காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவின்போது நடிகை சம்யுக்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வாரிசு படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு விஜய் கூட பெருசா டயலாக் ஒன்னும் கிடையாது. இது ஒரு குடும்பப்படம் என்பதால் சில காட்சிகளில் எல்லோரும் ஒன்றாக தோன்றுவோம். எனக்கு முதல் முறையாக நடிகர் விஜய்யின் நடிப்பை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும். இதை நான் ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக் கொள்கிறேன். சூட்டிங் ஸ்பாட்ல எல்லார் கூடவும் ரொம்ப நல்லா பழகுவாரு. ஒரு ஸ்டார் மாதிரி இருக்காம ரொம்ப எளிமையா இருப்பாரு. அவர் குடைய கூட அவரே பிடித்துக் கொள்வார் என்று கூறினார்.