செல்லும் பாதையில் விதைக்கும் எல்லாம் விதைகளும் முளைப்பதில்லை… பழகும் எல்லா உறவுகளும் நிலைப்பதில்லை:
பாம்போடு பருந்து நட்பு கொள்கிறது எனில்….பருந்திற்கு பசியில்லை என்று அர்த்தம்… காரணங்களும், விளக்கங்களும் கூறும் வரை நீ வெற்றி பெற மாட்டாய்..! இமைகள் துடிக்கும் துடிப்பும் இதயம் துடிக்கும் துடிப்பும் ஒன்றல்ல… அருகில் இருக்கும் பொழுது சிலரின் அருமை தெரிவதில்லை! இலைகள் உதிர்வதால் வேர்கள் வருந்துவதில்லை… செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, விளைவுகளை பற்றி சிந்திக்காத..! வினைகள் நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும்! எதுவாயினும் கடக்கப்பழகு எல்லாம் சிறிது காலம் தான் ..!
தங்கமா,தகரமா என்று அராயாதே..! கைவிலங்கு என்றால் அதை கழற்றி எறி! அன்பென்ற பெயரில் பண்டமாற்று முறை வேண்டாம்..! அதற்கு விரோதம் உயர்வானது! உடல் வளர், உயிர் வாழும்!இழந்தவற்றை பற்றி சிந்தித்தால் உடலும்,உயிரும் தேயும்!ஏதும் செய்யாமல் இருப்பவனின் இரத்தத்தை விட… உழைப்பவனின் வியர்வை உயர்வானது! உழை! உன் இரத்தத்தை விட உன் வியர்வை உயர்வானது என்று….உலகம் ஏற்கும் வரை உழை,தேவையற்ற சிந்தைகளுக்கு முக்கியத்துவம் தராதே வாழ்வில் சோதனைகளை சந்திக்காமல்..சாதனை என்றும் சாத்தியமற்ற ஒன்று!வாழ்வில் சிறந்த கேள்விகளை நீ கேட்டால்….யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு இருக்காது…!