Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாரையும் நம்ப முடியல…. ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

பூட்டி இருந்த வீட்டில் திட்டம் போட்டு திருடிய ஒருவர் சிக்கிய நிலையில் மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள சிவராம் செட்டியார் தெருவில் நாகேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகேந்திரன் தனது குடும்பத்தினரோடு வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்றுள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் மாற்றுசாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 37,500 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைதொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய நாகேந்திரன் பணத்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அதே தெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் சந்தோஷ் 2 பேருடன் சேர்ந்து திட்டம் போட்டு நாகேந்திரன் வீட்டில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார் அவருக்கு உதவிய மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |