Categories
சினிமா தமிழ் சினிமா

யாரையும் நான் காதலிக்கல…என் திருமணம் ஒரு கொண்டாட்டம் விளக்கம் அளித்த ரகுல் பிரீத் சிங்…!!

நடிகரை காதலித்து திருமணம் செய்வதற்க்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை ரகுல் பிரித் சிங் விளக்கமளித்துள்ளார்.

தீரன் அதிகாரம், தேவ் , என் ஜி கே  ஆகிய படங்களில்  நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங் . இவர் தற்போது கமலுடன் இந்தியன்-2 படத்திலும்  சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும்  நடித்து வருகின்றார். போதைப்பொருள் வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த  ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக சமூக வலைதளத்தில் தற்போது தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றது.

இதற்கு விளக்கம்  அளித்த ரகுல் பிரீத் சிங்,” நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே . எனக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. அவ்வாறு  நடந்தாலும் அது கொண்டாட்டமாக இருக்கும். தமிழ், தெலுங்கு இந்தியில் தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கிறேன் . மேலும் அது அடுத்த வருடம் திரைக்கு கொண்டு வரப்படும் “என கூறினார்.

Categories

Tech |