Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

யாரையும் புண்படுத்தாதீங்க ப்ளூ சட்டை… வேம்புலி வைத்த கோரிக்கை…!!!

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் ஜான் கொக்கன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடமாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 இல் வலிமை ரிலீஸ்சாகியது . இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்றிருக்கத்தான் செய்கிறது. இதனைத்தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை படம் குறித்து மோசமான முறையில் விமர்சித்து இருந்தார். இதற்கு சார்பட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் வேண்டுகோளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பகிர்ந்ததாவது நீங்கள் ஒரு பெரிய சினிமா விமர்சகர். ஆனால் நான் ஒரு சிறிய நடிகன் மட்டுமே. நீங்கள் விமர்சனம் செய்வது குறித்து நான் ஒரு கோரிக்கையை முன் வைக்க வேண்டி இருக்கின்றது. சினிமாவில் விமர்சனம் என்பது அதை வளர வைப்பது. நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் ஒரு முன்னணி நடிகரை விமர்சிக்கும்போது மரியாதையுடன் விமர்சிக்க வேண்டும்.

நீங்களும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள். அதனால் படத்தின் வலி மற்றும் சூழ்நிலைகள் உங்களுக்கே தெரியும். அதனால் தமிழ் சினிமாவை பற்றி புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் விமர்சனம் செய்வது பெரும்பாலும் மற்றவர்களை இழிவு படுத்தும் வகையிலும் மோசமான விமர்சனமாகவும் இருக்கின்றது. இதுபோல் எல்லோராலும் விமர்சிக்க முடியும். ஆனால் மற்றவர்களை புண்படுத்தாமல் விமர்சிக்க திறமையானவர்களால் மட்டுமே முடியும். தமிழில் ஏராளமான நல்ல வார்த்தைகள் உள்ளது. நீங்கள் விமர்சனம் செய்யும்போது அதை பயன்படுத்தி விமர்சிக்கலாம். ஒரு சிறிய நடிகனின் கோரிக்கை இது. நான் அஜித் சாரின் ரசிகன் அவர் ஸ்டைலில் கூறுவதென்றால் “நீங்க என்ன வேணா பண்ணுங்க.. நீங்க பிடிச்சதை பண்ணுங்க.. ஆனா அடுத்தவனை மிதிச்சி முன்னேறணும்னு நினைக்காதீங்க.. வாழு வாழ விடு..” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |