பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜ.கவின் லட்சுமண ரேகையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடப்போவதில்லை. மேலும் கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தற்போது தொடங்கி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் களையெடுப்பது உறுதி. பா.ஜ.கவில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் தொடரும் எனவும் பாஜக நாகரிகமான அரசியல் செய்து வருகிறது.
மேலும் காயத்ரி ரகுராம் விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை வரவேற்று முழுமையாக ஆதரிக்கிறது. அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும். இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து பா.ம.க வெளியேறுமா என்பது பற்றிய கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் தடை சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக பா.ஜ.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக பா.ஜ.க பேருந்து போல பழையவர்களை இறக்கி விட்டால் தான் புதியவர்கள் ஏற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.